மாணவிகளின் வசதிக்காக 3 டவுன் பஸ்கள்


மாணவிகளின் வசதிக்காக 3 டவுன் பஸ்கள்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரிக்கு மாணவிகளின் வசதிக்காக 3 டவுன் பஸ் சேவையை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே சின்னையகவுண்டன்வலசுவில் பழனியாண்டவர் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுமார் 450 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவிகளின் வசதிக்காக 3 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு 3 பஸ்களின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



Next Story