ரெயில் விபத்து காரணமாக 3 ரெயில் சேவைகள் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு


ரெயில் விபத்து காரணமாக 3 ரெயில் சேவைகள் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

ஒடிசா ரெயில் விபத்து காரணமாக 3 ரெயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

நாட்டை உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் மீட்புப்பணிகள் முடிவடைந்து மறு சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ரெயில் விபத்து காரணமாக 3 ரெயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, நாளை எர்ணாகுளத்தில் இருந்து ஹவுரா செல்லும் அந்தியோதயா ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.

நாளை பெங்களூருவில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா அதிவிரைவு ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 5 மற்றும் 6ம் தேதிகளில் பெங்களூருவில் இருந்து ஹவுரா துரண்டோ ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டு உள்ளது.


Next Story