ரூ.75 லட்சத்தில் 3 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்


ரூ.75 லட்சத்தில் 3 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை

அமைச்சர் காந்தி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு முழுவதும் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி ஜோதி நகர், ராணிப்பேட்டை நகராட்சி ஜெயராம் நகர், ஆற்காடு நகராட்சி பெரிய அசேன்புரா ஆகிய பகுதிகளில் தலா ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 3 நகர்ப்புற நலவாழ்வு மையங்களையும் அவர் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ராணிப்பேட்டை நகராட்சி பிஞ்சி ஜெயராம் நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் குத்து விளக்கேற்றினார்.

மருத்துவ சேவைகள்

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி, நோய் தடுப்பு மருந்து துறை துணை இயக்குனர் மணிமாறன், ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மற்றும் வினோத், கோபி, குமார், சங்கீதா அசேன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், மருத்துவ துறையினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.

இ-சஞ்சீவி இணைய முகப்பின் மூலமாக மருத்துவர்கள் காணொலி வாயிலாக நோயாளிகளின் மேல் சிகிச்சைக்காக மற்றொரு முதுநிலை மருத்துவரின் ஆலோசனையை பெறவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் ஆகியோரை கொண்டு மருத்துவ சேவை அளிக்கப்படும் என தெரிவித்தனர்.


Next Story