வீட்டில் வைத்து சாராயம் விற்ற 3 பெண்கள் கைது
திருக்கோவிலூர் அருகே வீட்டில் வைத்து சாராயம் விற்ற 3 பெண்கள் கைது
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் சில வீடுகளில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து சென்று வீரபாண்டி கிராமத்தில் சந்தேகத்தின் பேரில் சில வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் 3 வீ்டுகளில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக உதயகுமார் மனைவி மச்சக்காந்தி, கண்ணன் மனைவி பெரியாயி மற்றும் சுரேஷ் என்கிற கட்ட சுரேஷ் மனைவி விஷ்ணுபிரியா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story