மொபட் மீது கார் மோதி 3 வயது சிறுவன் சாவு


மொபட் மீது கார் மோதி 3 வயது சிறுவன் சாவு
x

வெறையூர் அருகே மொபட் மீது கார் மோதி 3 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வெறையூர் அருகே உள்ள ஆண்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார். இவரது மனைவி எழிலரசி. இவர்களின் மகன்கள் ரோகித் (வயது 5) வர்ஜித் (3).

சம்பவத்தன்று எழிலரசி 2 மகன்களுடன் சொந்த வேலை காரணமாக மொபட்டில் திருவண்ணாமலை சென்று விட்டு மீண்டும் ஆண்டியார்பாளையம் வந்து கொண்டிருந்தார்.

தென்மாத்தூர் அருகே வரும்போது எதிரே வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் எழிலரசி, ரோகித், வர்ஜித் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

மேலும் காரில் வந்த குடியாத்தம் கீழ்ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் தர்ஷன் (7) என்ற சிறுவனும் படுகாயம் அடைந்தான்.

உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வர்ஜித் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story