பெண் விவசாயியிடம் ரூ.35 லட்சம் மோசடி:கணவன், மனைவிக்கு 3 ஆண்டு சிறைசேலம் கோர்ட்டில் தீர்ப்பு


பெண் விவசாயியிடம் ரூ.35 லட்சம் மோசடி:கணவன், மனைவிக்கு 3 ஆண்டு சிறைசேலம் கோர்ட்டில் தீர்ப்பு
x
சேலம்

சேலம்

பெண் விவசாயியிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

காண்ட்ராக்டர்

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவிற்குட்பட்ட நங்கவள்ளி, காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சலபதி. காண்ட்ராக்டராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்தில் இறந்து போனார். இவருடைய மனைவி சித்ரா (வயது 46). இவர் விவசாயம் செய்து வருகிறார். சேலம் மாவட்டம் வீரக்கல் புதூர் கோனூர் கிராமத்தை சேர்ந்தவர் பசுவராஜ் (55). இவருடைய மனைவி ஜானகி. (52).

பெற்றோர் வீட்டின் அருகே வசித்து வந்த பசுவராஜ், ஜானகி ஆகியோரிடம், சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக இருந்து உள்ளனர். அப்போது தாங்கள் ரத்த பரிசோதனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருவதாக கூறி, சித்ராவிடம் அவ்வப்போது கடன் பெறுவதும், பின்னர் திருப்பி கொடுப்பதுமாக இருந்துஉள்ளனர்.

சிறை தண்டனை

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பர்னிச்சர்ஸ் இறக்குமதி செய்து விற்பனை செய்தால் நலம் லாபம் கிடைக்கும் எனவே தொழில் முதலீடு செய்யுமாறு சித்ராவிடம் கூறியுள்ளனர். இதை நம்பி அவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பல தவணைகளில் ரூ.35 லட்சம் அவர்களிடம் கொடுத்து உள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் பணம் கொடுக்க வில்லை. இதனால் பணம் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இது குறித்து சித்ரா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுவராஜ், ஜானகி ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து பெண் விவசாயியிடம் பணம் மோசடி செய்த பசுவராஜ், இவருடைய மனைவி ஜானகி ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.


Next Story