கம்ப்யூட்டர் டிசைனருக்கு 3 ஆண்டு சிறை


கம்ப்யூட்டர் டிசைனருக்கு 3 ஆண்டு சிறை
x

தொழிலாளி வீட்டில் நகை திருடிய கம்ப்யூட்டர் டிசைனருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேந்தமங்கலம் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்

சேந்தமங்கலம்

கம்ப்யூட்டர் டிசைனர்

நாமக்கல் மாவட்டம் பேளூக்குறிச்சி அருகே உள்ள சிங்களாந்தபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது வீட்டில் கடந்த 2.1.2019 அன்று வீட்டில் இருந்த 19 பவுன் நகை திருட்டு போனது. அது சம்பந்தமாக அவர் பேளூக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். அதை தொடர்ந்து மதுரை மாவட்டம் சம்பகுளம் பகுதியைச் சேர்ந்த கம்ப்யூட்டர் டிசைனரான பிரேம்குமார் (30) என்பவர் தங்கவேல் வீட்டில் திருடியது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அவரை பேளூக்குறிச்சி போலீசார் கைது செய்து ஆத்தூரில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர். இதையடுத்து பிரேம்குமார் மீது சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாஸ்கரன் பிரேம்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.


Next Story