தனியார் நிறுவன ஊழியருக்கு 3 ஆண்டு சிறை
பெண்ணின் இ-மெயில் ஐ.டி.யை ஹேக் செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சரவணபாபு தீர்ப்பு கூறினார்.
கோயம்புத்தூர்
கோவை அருகே உள்ள பி.என்.புதூரை ேசர்ந்த ரேணி பிரியா என்பவருக்கும், அவருடைய கணவர் துரைராஜுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர். இதை தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியரான துரைராஜ், ரேணி பிரியாவின் இ-மெயில் ஐ.டி.யை ஹேக் செய்து அதை பயன்படுத்த முடியாமல் தொந்தரவு செய்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜை கைது செய்தனர்.
பின்னர் இதுதொடர்பான வழக்கு கோவை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட துரைராஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு சரவணபாபு தீர்ப்பு கூறினார்.
Next Story