வருவாய் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை


வருவாய் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கோயம்புத்தூர்

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ரூ.15 ஆயிரம் லஞ்சம்

கோவை மாவட்டம் குன்னத்தூர்புதூரில் வசித்து வந்த மகேந்திர பிரபு என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு தனது தந்தை நிலத்தை அளந்து வரைபடம் தர வேண்டும் என்று வடக்கு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

அதற்கு வருவாய் துணை ஆய்வாளர் பொன்னுசாமி என்பவர் லஞ்சமாக ரூ.15 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இது குறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் மகேந்திர பிரபு புகார் செய்தார்.

3 ஆண்டு சிறை

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்தனர். அப்போது மகேந்திரபிரபுவிடம் லஞ்சப்பணம் ரூ.15 ஆயிரத்தை வாங்கும்போது வருவாய் துணை ஆய்வாளர் பொன்னுசாமி பிடிபட்டார்.

இந்த வழக்கு விசாரணை கோவை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து பொன்னுசாமிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.


Next Story