வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 27 Sep 2023 9:45 PM GMT (Updated: 27 Sep 2023 9:45 PM GMT)

கூடலூர் அருகே அங்கன்வாடி பணியாளரை கத்தியால் குத்திய வழக்கில், வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே அங்கன்வாடி பணியாளரை கத்தியால் குத்திய வழக்கில், வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கத்தியால் குத்தினார்

நீலகிரி மாவட்டம் கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி ப்ளோரிடா மேரி (வயது 45). ஸ்ரீமதுரை ஊராட்சி போஸ்பாரா பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய பணியாளராக பணியாற்றி வந்தார். இதற்கிைடயே கடந்த 30.7.2019-ந் தேதி அன்று வழக்கம்போல் அவர் அங்கன்வாடி மையத்துக்கு சென்றார்.

பின்னர் மையத்தில் உள்ள குழந்தைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கன்வாடி மையத்துக்குள் வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ப்ளோரிடா மேரியை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சத்தம் போட்டார். பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். மேலும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ப்ளோரிடா மேரியை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

3 ஆண்டு சிறை தண்டனை

இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் கூடலூர் அருகே புளியம்பாறை கத்தரித்தோடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் (28) என்பது தெரியவந்தது. அவர் ப்ளோரிடா மேரியின் மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறி வந்தார்.

இதற்கு ப்ளோரிடா மேரி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த தியாகராஜன் அவரை கத்தியால் குத்தியது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து தியாகராஜனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கூடலூர் மாவட்ட உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தியாகராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி முகமது அன்சாரி தீர்ப்பளித்தார். மேலும் அங்கன்வாடி மையத்துக்குள் அத்துமீறியதற்காக 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் தியாகராஜனை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story