தொழிலாளியை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


தொழிலாளியை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x

தொழிலாளியை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஆத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சேலம்

ஆத்தூர்:

ஏத்தாப்பூர் அருகே உள்ள அபிநவம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 39), தொழிலாளி. இவருக்கும், வாழப்பாடி அருகே உள்ள சென்ராயன்பாளையத்தை சேர்ந்த சங்கர் மகன் யுவராஜ் (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 3.2.2021 அன்று யுவராஜ், ராமமூர்த்தி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது யுவராஜ் உருட்டு கட்டையால் ராமமூர்த்தியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு முனுசாமி, குற்றம்சாட்டப்பட்ட யுவராஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story