எலக்ட்ரிக்கல் கடை ஊழியரை தாக்கி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது


எலக்ட்ரிக்கல் கடை ஊழியரை தாக்கி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 9 Sept 2023 2:20 AM IST (Updated: 9 Sept 2023 2:53 AM IST)
t-max-icont-min-icon

எலக்ட்ரிக்கல் கடை ஊழியரை தாக்கி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

வாழப்பாடி:

சேலம் சிவதாபுரம் சஞ்சீவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 27). இவர் சம்பவத்தன்று வாழப்பாடி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மேற்கு ராஜாபாளையம் ஊராட்சியில் 3 பேர் குணசேகரனை வழிமறித்து பீர்பாட்டிலால் தாக்கி அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் பறித்து சென்றனர். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் 50 நாட்களுக்கு பின்னர் நேற்று சேலம் சன்னியாசிகுண்டு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (26), கிச்சிபாளையம் காலனி பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (25), குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அக்பர் அலி (24) ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் குணசேகரனை தாக்கி பணத்தை பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது சேலத்தில் வழிப்பறி வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story