தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
நெல்லையில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியை சேர்ந்தவர் வேல்சாமி மகன் இளங்கோ (வயது 42). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், தாழையூத்து பூந்தோட்ட தெருவை சேர்ந்த குமார் மகன் கார்த்திக் (29) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக், நெல்லை டவுன் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த சுந்தர் (25), டவுன் அக்கசாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் (19) ஆகியோர் இளங்கோ வீட்டுக்கு சென்று அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், சுந்தர், லட்சுமணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story