பெயிண்டர்களை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
பெயிண்டர்களை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). போயம்பாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம் (52). நண்பர்களான இவர்கள் 2 பேரும் பெயிண்டிங் வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு இருவரும் மோட்டாா் சைக்கிளில் நெருப்பெரிச்சல் அருகே வந்தனர். அப்போது வாவிபாளையத்தை சேர்ந்த சூர்யா (25), பரத்குமார் (23), சண்முகவேல் (23) ஆகிய 3 பேரும் குடிபோதையில் 2 மோட்டார்சைக்கிள்களில் வந்துள்ளனர். அப்போது சதீஷ்குமார் மோட்டார்சைக்கிள் மீது இந்த 3 பேர் வந்த மோட்டார்சைக்கிளில் மோதி உள்ளது. இதை சதீஷ்குமாரும், பரமசிவமும் இதை கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சூர்யா, பரத்குமார், சண்முகவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து நடுரோட்டில் வைத்து சதீஷ்குமாரையும், பரமசிவத்தையும் தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்த வாவிபாளையத்தை சேர்ந்த அய்யப்பன் இதை தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த 3 பேரும் அய்யப்பனையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் அங்கு பொதுமக்கள் வந்ததை தொடர்ந்து 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யா, பரத்குமார், சண்முகவேல் ஆகியோரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் 3 பேர் மீதும் ஏற்கனவே வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.