போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது


போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது
x

போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

அரியமங்கலம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஸ்டாலின் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் ஆட்டோவில் இருந்த அண்ணா நகரை சோ்ந்த முத்துக்குமார்(வயது 29), இவரது தம்பி இளவரசன்(25), காவேரிநகர் திடீர் நகரை சேர்ந்த சரவணன்(23) ஆகியோர் அரிவாளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் அவர்களிடம் கேட்டபோது அங்கு வந்த ரேணுகாதேவி(29), கிருஷ்ணவேணி(26) ஆகியோர் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். மேலும் முத்துக்குமார், இளவரசன், சரவணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கீழே தள்ளி விட்டனர். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனத்தையும் சேதப்படுத்தினர். தொடர்ந்து போலீசாரிடம் அரிவாளை காட்டி மிரட்டி அங்கிருந்து 5 பேரும் தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமார், இளவரசன், சரவணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ரேணுகாதேவி, கிருஷ்ணவேணி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story