கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
ஜோலார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சேதுக்கரசன், பிரபு மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இடையம்பட்டி கருமாரியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள் ஜோலார்பேட்டை அருகே உள்ள ரெட்டியூர் சின்னகம்பியம்பட்டு பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் லோகேஷ் (வயது 25), முருகன் மகன் விஷ்ணு (19), விஜயகுமார் மகன் விக்னேஷ் (23) என்பதும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.
மேலும் இவர்கள் பச்சூர் பகுதியில் கஞ்சா வாங்கி வந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து 3 வாலிபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story