கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது


கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
x

மேலப்பாளையம், பாளையங்கோட்டையில் கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை,:

நெல்லை மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலப்பாளையம் நேதாஜி ரோடு பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டு இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேலப்பாளையம் அண்ணாநகரை சேர்ந்த கண்ணன் என்ற சுடுகாட்டு கண்ணன் (வயது 30) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வ.உ.சி. மைதானம் அருகே கஞ்சா விற்றதாக பெருமாள்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் செல்வம் (19) மற்றும் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்றதாக பாளையங்கோட்டை ராஜேந்திரன் நகரை சேர்ந்த உதயகுமார் மகன் சேர்மதுரை (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.Next Story