கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 27 Dec 2022 6:45 PM GMT (Updated: 27 Dec 2022 6:47 PM GMT)

கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

சேரம்பாடி,

நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சேரம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் சேரம்பாடி அடுத்த செப்பந்தோடு பகுதியில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படி வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவர் எருமாடு பஜார் பகுதியை சேர்ந்த முகமது நிசார் (வயது 32) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் சேரம்பாடி எலியாஸ் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த முருகேசன் (35), எருமாடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மண்ணாத்தி வயல் பகுதியை சேர்ந்த பிரேம நாதன் (32) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story