பசுமாடுகளை திருடிய 3 வாலிபர்கள் கைது


பசுமாடுகளை திருடிய 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே பசுமாடுகளை திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நத்தமலை கிராமம் என்.எஸ்.பி. நகரை சேர்ந்தவர் இளையராஜா(வயது 44). தொழிலாளியான இவர் வீட்டில் 4 பசு மாடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இந்த பசு மாடுகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இது குறித்து இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான போலீசார் வீராணம் ஏரிக்கரை சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கொள்ளுமேடு பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் காட்டுமன்னார்கோவில் அருகே மானியம் ஆடூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெகன்(22), சைலேஷ்(31), மந்தாரக்குப்பம் காமராஜர் தெருவை சேர்ந்த வீரமணி(33), என்பதும், இளையராஜாவின் 4 பசு மாடுகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு பசுமாடு, மினி வேன் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story