மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது 6 இருசக்கர வாகனங்கள், 1 கிலோ கஞ்சா பறிமுதல்

கடலூர்

சிதம்பரம்

சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் நேற்று சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் காட்டுமன்னார்கோவில் குமிலங்காட்டு தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தராசு மகன் நந்து என்கிற நந்தகுமார்(வயது 24), வீரானந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் மணிகண்டன்(23), அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சொக்கலிங்கபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சதீஷ்(35) என்பதும், இவர்கள் 3 பேரும் சிதம்பரம் பகுதியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


Next Story