தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது


தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் பைபாஸ் சாலையில் ஆற்காடு டவுன் போலீசார் நேற்று முன் தினம் மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிரு்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்கள ராணிப்பேட்டையை அடுத்த அடுத்த மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரமணா (வயது 22), மாந்தாங்கல் பத்மாபுரத்தைச் சேர்ந்த சர்மா (25) வாலாஜாவை அடுத்த தேவதானம் பகுதியைச் சேர்ந்த தருண் (20) கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு ஆற்காடு பைபாஸ் சாலை தனியார் கல்லூரி அருகே மோட்டார்சைக்கிளின் முன் சீட்டில் வைத்திருந்த செல்போனை திருடியவர்கள் என்பதும் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறி திருட்டில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறிமுதல் செய்தனர்.


Next Story