கார்-லாரி மோதலில் 3 வாலிபர்கள் பலி
செங்கத்தில் கார்-லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செங்கத்தில் கார்-லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார்-லாரி மோதல்
திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் யோகேஷ் (வயது 25), ஆகாஷ் (20), கவுதம மணிகண்டன் (28). இவர்கள் 3 பேரும் காக்கனாம் பாளையத்தில் இருந்து திருச்சி செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புறவழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, திண்டிவனத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு பெங்களூரு நோக்கி சென்ற லாரியும், இவர்களது காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
3 பேர் பலி
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யோகேஷ், ஆகாஷ், கவுதம மணிகண்டன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரில் சிக்கியிருந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.