3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

போக்சோ வழக்கில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் கீழத்துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முனீஸ்வரன் (வயது 22). இவரும், நெல்லை வீரராகவபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேஷ் (20), சின்னக்குட்டி (24) ஆகியோரும் சேர்ந்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். அதனை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் ஏற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.


Next Story