ஆயுதங்களுடன் சென்ற 3 வாலிபர்கள் கைது
ஆயுதங்களுடன் சென்ற 3 வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம் அடையும் வகையில் 3 வாலிபர்கள் கையில் ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். உடனே போலீசார் அந்த 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பராசக்திகாலனியை சேர்ந்த சீனிவாசன் மகன் காந்திராஜன் (வயது 26), பள்ளப்பட்டி முத்துராமலிங்கப்புரம் காலனியை சேர்ந்த சங்கிலிகருப்பன் (30), ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்த காளிமுத்து மகன் வைரமுத்து (22) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் காந்திராஜன் அண்ணன் அரவிந்தன் என்பவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்க 3 பேரும் ஆயுதங்களுடன் சென்றது தெரியவந்தது.