திருவாலந்துறை கிராமத்தில் 30-ந்தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்


திருவாலந்துறை கிராமத்தில் 30-ந்தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்
x

திருவாலந்துறை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 30-ந்தேதி நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா திருவாலந்துறை கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில் திருவாலந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முன்னதாகவே மனுக்களை அளித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்கள் தொடர்புத்திட்ட முகாமிற்கு முன்னதாக பொது சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாம் இன்று (புதன் கிழமை) நடக்கிறது. கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, மக்கள் தொடர்புத் திட்ட முகாமினை சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் தவறாது பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story