திருவாதவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.1½ கோடியில் 30 வீடுகள் - காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்


திருவாதவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.1½ கோடியில் 30 வீடுகள் - காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
x

திருவாதவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.1½ கோடியில் 30 வீடுகளை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்

மதுரை

மேலூர்

பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் மூலம் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 1,591 குடியிருப்புக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா திருவாதவூர் கிராமத்தில் இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு மையத்தில் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் 30 வீடுகள் கட்டப்பட்டன.

இவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து புதிய வீடுகளின் சாவிகள் மற்றும் சமையல் பாத்திரங்களை மாவட்ட கலெக்டர் சங்கீதா வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் மோனிகா ரானா, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் நேருபாண்டியன், திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன், துணை தலைவர் அஜார்பானுசிக்கந்தர், தாசில்தார் செந்தாமரை, ஒன்றிய கவுன்சிலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story