விவசாயி வீட்டில் 30 பவுன் நகை-பணம் திருட்டு
விவசாயி வீட்டில் 30 பவுன் நகை-பணம் திருட்டுபோனது.
பெரம்பலூர்
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கல்லை கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி(வயது 80). இவரது மனைவி தமிழரசி (70). மணி விவசாயம் செய்து வருகிறார். மணியின் மகன் மாலியவன். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூருக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மணி, தமிழரசி ஆகியோர் வீட்டை பூட்டாமல் வாசலில் தூங்கி கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் நள்ளிரவில் மணியின் வீட்டிற்குள் புகுந்து, வீட்டின் 2 அறைகளிலும் இருந்த பீரோவின் கதவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின்பேரில், குன்னம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story