30 பேர் கைது


30 பேர் கைது
x

மது பாட்டில்கள்- புகையிலை பொருட்கள் விற்ற 30 பேர் கைது

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் மது பாட்டில்கள், கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசாரின் தொடர் சோதனையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 178 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story