மேல்மலையனூருக்கு 30 சிறப்பு பஸ்கள் இயக்கம்


மேல்மலையனூருக்கு 30 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

வேலூரில் இருந்து மேல்மலையனூருக்கு 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

வேலூர்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் 2-வது ஆடி அமாவாசை விழா நடைபெற்றது. அமாவாசை திருவிழா மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மேல்மலையனூருக்கு சென்றனர்.

இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 30 சிறப்பு பஸ்கள் நேற்று முன்தினம் மாலை முதல் இயக்கப்பட்டன. இதில், குடும்பம், குடும்பமாக பக்தர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர். நேற்று காலை வேளையில் சிறப்பு பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் வருகைக்கு ஏற்ப தொடர்ந்து பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோன்று வேலூர் மண்டலம் சார்பில் சென்னை, ஆற்காடு, திருப்பத்தூரில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டதாக வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story