300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Aug 2023 9:15 PM GMT (Updated: 2 Aug 2023 9:15 PM GMT)

300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் முருகானந்தம் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், சந்தோஷ்குமார் மற்றும் பணியாளர்கள் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடைகளில் இருந்து பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்பட 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story