பெங்களூருவில் இருந்து காரில் கடத்திய 3 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

பெங்களூருவில் இருந்து காரில் கடத்திய 3 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
x

பெங்களூருவில் இருந்து காரில் கடத்திய 3 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூர்

வாணியம்பாடி,

பெங்களூருவில் இருந்து காரில் கடத்திய 3 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் டோல்கேட் அருகே வாணியம்பாடி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காலை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் காரில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து காரை ஓட்டிவந்தநபரிடம்விசாரணை நடத்தியதில் அவர் முனியப்பன் (வயது 45) என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் வழியாக, தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும்தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் காருடன், 3,000 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story