கோவையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


கோவையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் குண்டுவெடிப்பு தினத்தையொட்டி இன்று 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை,

கோவையில் குண்டுவெடிப்பு தினத்தையொட்டி இன்று 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு தினம்

கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14- ந்தேதி கோவையில் பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன.இதில் 58 பேர் பரிதாபமாக இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை நகரில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

3 ஆயிரம் போலீசார்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், நகரில் 4 துணை கமிஷனர்கள் தலைமையில் சுமார் 2ஆயிரம் போலீசாரும், வெளியூரில் இருந்து 2 டி.ஐ.ஜி., 4 எஸ்.பி. 18 உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.க்கள், 225 கமாண்டோ போலீசார், 100 அதிவிரைவுப்படை போலீசார் என 1,000 போலீசார் உள்பட மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓட்டல்களில் சோதனை

குறிப்பாக லாட்ஜ், ஓட்டல்கள், பொது இடங்கள். பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட், சினிமா தியேட்டர்கள், மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 16 சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. 400-க்கும் மேற்பட்ட பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் ஜீப், பைக் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அனுமதியின்றி போஸ்டர், பேனர் வைக்க கூடாது. சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை பதிவிடக்கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் மூலமாக தடை செய்யப்பட்ட அமைப்புகள், பல்வேறு கால கட்டங்களில் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டவர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.


Next Story