தமிழ்நாட்டில் 30 ஆயிரம் டிரைவர், கண்டக்டர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழ்நாட்டில் 30 ஆயிரம் டிரைவர், கண்டக்டர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
x

தமிழ்நாட்டில் 30 ஆயிரம் டிரைவர், கண்டக்டர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் நிலவும் கடுமையான டிரைவர் பற்றாக்குறை காரணமாக 2022-2023-ம் ஆண்டில் மட்டும் 29 லட்சத்து 70 ஆயிரம் தடவை பேருந்து சேவை பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மாநகர போக்குவரத்து கழகத்தின் ஒட்டுமொத்த சேவைகளில் ஆறில் ஒரு பங்கு சேவை, டிரைவர்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்படுவது போக்குவரத்து துறைக்கு தலைகுனிவாகும்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள பிற அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவே தமிழக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

9 ஆண்டுகளில் அரசு போக்குவரத்து கழக பஸ்களின் இயக்க தூரம் சுமார் 14.19 லட்சம் கி.மீ., அதாவது 15.59 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இது போக்குவரத்து கழகங்களின் வரலாற்று வீழ்ச்சி ஆகும். அரசு போக்குவரத்து கழகங்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால் இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களிலும் ஒட்டுமொத்தமாக காலியாக உள்ள 30 ஆயிரத்திற்கும் கூடுதலான டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதன் மூலம் அரசு போக்குவரத்து கழகங்களை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story