மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 304 மனுக்கள் பெறப்பட்டன


மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 304 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில்304 மனுக்கள் பெறப்பட்டன.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைக்கேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாற்றுதல், தொழில் தொடங்க கடனுதவி, ஏரி, குளம் தூர் வாருதல், சாலை வசதி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 304 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அந்த மனுக்களை பெற்ற கலெக்டர், அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணும்படி உத்தரவிட்டார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள சக்கர நாற்காலியை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், சமூக பாதுகாப்பாளர் ராஜலட்சுமி, வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, துணை இயக்குனர் சுந்தரம், ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story