306 விநாயகர் சிலைகள் கரைப்பு


306 விநாயகர் சிலைகள் கரைப்பு
x

துடியலூர் பகுதியில் 306 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

கோயம்புத்தூர்

துடியலூர்

துடியலூர் பகுதியில் 306 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி துடியலூர் பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.

துடியலூர் பகுதியில் இந்துமுன்னணி சார்பில் 178 சிலைகள், இந்துமக்கள் கட்சி சார்பில் 20 சிலைகள், விசுவ ஹிந்து பர்ஷத் சார்பில் 19 சிலைகள், அனுமன் சேனா சார்பில் 9 சிலைகள், பாரத் சேனா சார்பில் 17 சிலைகள், ஹிந்து பாரத் சேனா சார்பில் 6 சிலைகள், அகிலபாரத இந்து மகா சார்பில் 19 சிலைகள், பொதுமக்கள் சார்பில் 38 சிலைகள் என மொத்தம் 306 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வெள்ளக்கிணர் குட்டையில் கரைக்கப்பட்டது.

குட்டையில் கரைப்பு

இதற்காக வெள்ளக்கிணர் குட்டையில் 60 லாரிகள் மற்றும் 2 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப் பப்பட்டது. சிலைகளை கரைக்கும் பணியில் மாநகராட்சி ஊழி யர்கள் ஈடுபட்டனர். கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் தனசேகரபாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், வருவாய் துறையினர், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக இந்து முன்னணி சார்பில் துடியலூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்கள் கோவிந் தன் என்ற பாலகிருஷ்ணன் உள் பட பலர் பேசினர். ஊர்வலத்தை கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜா தொடங்கி வைத்தார்

பன்னிமடையில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் நடை பெற்ற விசர்ஜன ஊர்வலத்தை தமிழ் மாநில இளைஞர் அணி தலைவர் கே.ஆர்.சுபாஷ் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story