நெற்கட்டும் செவலில் 307-வது பிறந்த நாள் விழா: பூலித்தேவன் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை


நெற்கட்டும் செவலில் 307-வது பிறந்த நாள் விழா: பூலித்தேவன் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
x

நெற்கட்டும் செவலில் நடந்த பிறந்தநாள் விழாவில் பூலித்தேவன் சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் நினைவு மாளிகை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 1-ந்தேதி அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று பூலித்தேவன் 307-வது பிறந்தநாள் விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வம்

பூலித்தேவன் சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சா்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

பூலித்தேவன் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, எஸ்.பி.சண்முகநாதன், ராஜலட்சுமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அ.ம.மு.க.

நெற்கட்டும் செவலில் நடந்த பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் அ.ம.மு.க. சார்பில் தென்மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story