31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு -தமிழக அரசு உத்தரவு


31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு -தமிழக அரசு உத்தரவு
x

தமிழகத்தில் பணியாற்றும் 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அவர்கள் பணியில் சேர்ந்த ஆண்டை கணக்கில் கொண்டு பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி, தமிழகத்தில் 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளர், தேர்வு நிலை ஐ.ஏ.எஸ்., இளநிலை நிர்வாக நிலை ஐ.ஏ.எஸ். என 3 பிரிவுகளில் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 1999-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான கோவை ஒழுங்கு நடவடிக்கை ஆணையரான தேவ்ராஜ் தேவ், சமூகநீதி மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளர் சன்கோன்கம் ஜடக்சிரு, டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உறைவிட ஆணையரான ஆஷிஷ்சட்டர்ஜி, ஜெனீவா உலக வர்த்தக நிறுவனத்தின் இந்திய நிரந்தர பிரதியான பிரஜேந்திரநவ்நித் ஆகியோர் முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தேர்வுநிலை ஐ.ஏ.எஸ்.

2010-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பொறுப்பேற்ற மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, மின் ஆளுமை நிர்வாக இயக்குனர் பிரவீன் பி நாயர், பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவாத், மத்திய அரசு பணியில் உள்ள சுபோத்குமார், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி அஜய்யாதவ், விடுமுறையில் இருந்து வரும் ரஷ்மி சித்தார்த் சாகடே,

நில நிர்வாக கூடுதல் கமிஷனர் செந்தாமரை, இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன், வேளாண்மை சந்தை மற்றும் வேளாண்மை தொழில்துறை இயக்குனர் நடராஜன், தமிழ்நாடு உணவுக்கிடங்கு கழக நிர்வாக இயக்குனர் சிவஞானம், போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ், பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராமன், வேளாண்மைத்துறை இயக்குனர் அண்ணாதுரை, பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் ஆகியோர் தேர்வுநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

கலெக்டர்களுக்கு பதவி உயர்வு

2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பொறுப்பேற்ற மாவட்ட கலெக்டர்கள் ஜானிடாம் வர்க்கீஸ் (ராமநாதபுரம்), ஆகாஷ் (தென்காசி), பிரதீப்குமார் (திருச்சி), ஸ்ரவன்குமார் ஜடாவத் (கள்ளக்குறிச்சி), விசாகன் (திண்டுக்கல்), குமாரவேல்பாண்டியன் (வேலூர்), பாஸ்கரபாண்டியன் (ராணிப்பேட்டை) மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன்,

செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன், தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிகி பச்சுவா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக இணை மேலாண்மை இயக்குனர் கற்பகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை துணை செயலாளர் ஆனிமேரி ஸ்வர்னா ஆகியோர் இளநிலை நிர்வாக நிலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

வீரராகவராவ்

2007-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் வீரராகவராவ், பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார், மத்திய அரசு பணியில் இருக்கும் லதா, சிப்காட் மேலாண்மை இயக்குனர் சுந்தரவள்ளி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் சரவணவேல்ராஜ், ஆவின் மேலாண்மை இயக்குனர் சுப்பையன், தமிழ்நாடு குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரிகளாக பணியாற்றி வரும் கூடுதல் கலெக்டர்களான ரிசப் (திருவள்ளூர்), வீர் பிரதாப்சிங் (திருவண்ணாமலை), தீபனாவிஸ்வேஸ்வரி (தர்மபுரி), சித்ராவிஜயன் (விழுப்புரம்), தாக்கரே சுபம் தன்யந்திராவ் (தூத்துக்குடி), பிரத்விராஜ் (நாகப்பட்டினம்), பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல இணை கமிஷனர் (தெற்கு) அமித் ஆகியோர் கூடுதல் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.


Next Story