31 பேருக்கு கொரோனா தொற்று


31 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 4 July 2022 1:31 AM IST (Updated: 4 July 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

31 பேருக்கு கொரோனா தொற்று

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 398 பேருக்கு பரிசோதனை செய்ததில் 34 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 907 ஆக உயர்ந்தது.

நேற்று 11 பேர் குணமடைந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 22 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 151 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Related Tags :
Next Story