பிளாஸ்டிக் கவரில் சூடான உணவுகளை பார்சல் செய்த 31 கடைகளுக்கு அபராதம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவை பார்சல் செய்த 31 கடைகளுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிககை எடுத்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவை பார்சல் செய்த 31 கடைகளுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிககை எடுத்தனர்.
கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை ஆணையாளர் உத்தரவின்படியும், கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் அறிவுறுத்தலின் படியும், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 7 குழுக்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சாலையோர உணவகங்கள், தள்ளு வண்டி உணவு கடைகளில் கள ஆய்வு செய்தனர்.
அவர்கள் மொத்தம் 278 கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு சான்றிதழ் பெறாமல் 95 கடைகள் இயங்குவது தெரியவந்தது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவு பொருட் களை பார்சல் செய்த 31 கடைகளுக்கு ரூ.2000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த தொகை ரூ.62 ஆயிரம் வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
மேலும் விற்பனைக்கு வைக் கப்பட்டு இருந்த 44 கிலோ பழைய மற்றும் கலர் சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.9,620 ஆகும்.
31 கடைகளுக்கு நோட்டீஸ்
உணவு வியாபாரம் செய்யும் அனைத்து உணவு நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு துறையின் பதிவுசான்று, உரிமம் கண்டிப்பாக பெற வேண்டும்.
காபி, டீ, சாம்பார், ரசம் போன்ற சூடான உணவு பொருட்களை அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்ய கூடாது.
உணவு பொருட்களை கையா ளும் நபர்கள் கண்டிப்பாக தலையுறை, கையுறை அணிந்திருக்க வேண்டும்.
உணவு தயார் செய்யும் இடம், பரிமாறும் இடம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பழைய மற்றும் கெட்டுபோன உணவுகளை கண்டிப்பாக விற்பனை செய்ய கூடாது.
உணவு பொருட்களில் கண்டிப்பாக செயற்கை வர்ணம் சேர்க்ககூடாது
வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி 31 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டம் 2006 பிரிவு 55-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட ்டது.
உணவுபொருட்களின் தரம் குறித்த 94440 42322 என்ற உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் சமீரன் தெரிவித்து உள்ளார்.