313 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி; கனிமொழி எம்.பி. வழங்கினார்

தூத்துக்குடியில் நடந்த அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 313 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
தூத்துக்குடியில் நடந்த அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 313 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் விழா
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா தூத்துக்குடி விளையாட்டு மேம்பாட்டு அரங்கில் நடந்தது.
விழாவிற்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸரீ, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நலத்திட்ட உதவி
விழாவில், கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்டு இருந்த 313 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள், தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளி மோட்டார் வாகனம், ஸ்மார்ட் போன், காது கேட்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு வகையான பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் சமீபத்தில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் புத்தகம் வாங்கிய ரசீது மூலமாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கு மொத்தம் ரூ.1லட்சத்து 75 ஆயிரத்திற்கான பரிசு தொகையினை வழங்கினார்.






