வட்டார கல்வி அதிகாரிகளுக்கான தேர்வை 315 பேர் எழுதினர்


வட்டார கல்வி அதிகாரிகளுக்கான தேர்வை 315 பேர் எழுதினர்
x

கரூரில் 2 மையங்களில் நடந்த வட்டார கல்வி அதிகாரிகளுக்கான தேர்வை 315 பேர் எழுதினர்.

கரூர்

வட்டார கல்வி அதிகாரி

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வி துறையில் வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. கரூரில் பசுபதீஸ்வரர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வை எழுதுவதற்காக ஆண்கள் 215 பேரும், பெண்கள் 264 பேரும் என மொத்தம் 479பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வர்கள் தேர்வை எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு நேற்று காலையிலேயே வந்தனர். தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பயன்படுத்த தடைசெய்யப்பட்டிருந்தது. இதனால் தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாரிகள் ஆய்வு

கரூரில் நேற்று 2 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை ஆண்கள் 150 பேரும், பெண்கள் 165 பேரும் என மொத்தம் 315 பேர் எழுதினர். மொத்தம் 164 பேர் தேர்வு எழுதவரவில்லை. முன்னதாக தேர்வு நடைபெற்ற மையங்களில் கல்வி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இத்தேர்வு நிகழ்வுகளை வீடியோகிராபர்கள் மூலமாக கண்காணித்து வீடியோ பதிவு செய்யப்பட்டன. தேர்வு மையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.


Next Story