32 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


32 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

நாமக்கல்லில் கடைகளில் விற்ற தடை செய்யப்பட்ட 32 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா மற்றும் நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுமித்திரா பாய் ஆகியோர் உத்தரவின்படி நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கடைவீதி, கோட்டை மெயின் ரோடு, தெப்பக்குள தெரு பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து நகராட்சி பணியாளர்கள் மூலம் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

55 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 32 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடைக்காரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சாலையோர வியாபாரிகளுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஆய்வில் நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பாஸ்கர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் முரளி, உதவி பொறியாளர் கார்த்திக் குமுதன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story