3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


3,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 15 July 2022 10:00 PM GMT (Updated: 15 July 2022 11:23 PM GMT)

ஆலங்குளம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3,200 கிலோ ரேஷன் அரிசியை போலீார் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் விலக்கு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையம் அருகே உள்ள தெற்கு மயிலப்புரத்தை சேர்ந்த அபிஷேகம் (வயது 35), ஆந்திரமேடா (29) ஆகியோர் 2,700 கிலோ ரேஷன் அரிசியை லோடு ஆட்டோவில் கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே அவர்களை கைது செய்து லோடு ஆட்டோவையும், அரிசியையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்குறிச்சியை சேர்ந்த இளையராஜா என்பவர் 500 கிலோ ரேஷன் அரிசியை ஒரு காரில் கடத்திச்சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் காரையும், அரிசியையும் பறிமுதல் செய்தனர். இளையராஜாவை தேடி வருகிறார்கள்.


Next Story