கலை திருவிழாவில் பங்கேற்க 33 ஆயிரம் மாணவ-மாணவிகள் பதிவு-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தகவல்


கலை திருவிழாவில் பங்கேற்க 33 ஆயிரம் மாணவ-மாணவிகள் பதிவு-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தகவல்
x

ராமநாதபுரத்தில் கலைத் திருவிழாவில் பங்கேற்க 33 ஆயிரம் மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கலைத் திருவிழாவில் பங்கேற்க 33 ஆயிரம் மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறினார்.

கலை திருவிழா

ராமநாதபுரத்தில் பள்ளி கல்வித்துறையின் மூலம் மாவட்ட அளவிலான கலை திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியினை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கலை விழா என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். கலை என்பது எளிதாக தானாக வந்து விடக்கூடிய ஒன்றல்ல. முழுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே கலையினை பெற்றுக் கொள்ள முடியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கலைத்திறன் இருக்கும். அதை அரங்கேற்றம் செய்யும் இடம் தான் பள்ளிக்கூடம். அத்தகைய பள்ளி படிப்பின்போது படிப்புடன் சேர்ந்து தங்களுக்கு விருப்பமுள்ள கலையை தேர்வு செய்து அதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

ஆர்வமுடன் கலையை கற்கும்போது தங்கள் திறன் வெளிக்கொண்டு வருவது மட்டுமின்றி அதன் மூலம் சமுதாயத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறுகின்றன. பள்ளிக்கல்வித்துறையின் மூலம் தற்போது இந்த கலைத் திருவிழாவிற்காக பங்கேற்க 33 ஆயிரம் மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. அதேபோல் வட்டார அளவில் 15 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி இருப்பது வரவேற்கத்தக்கது.

பெருமை தேடி தர வேண்டும்

கலை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வகையில் உதவியாக இருந்திடும். எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிக அளவு மாணவ, மாணவிகள் பங்கு கொண்டு தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி உங்களுக்கும், பள்ளிக்கும் பெருமை தேடித் தருவதுடன் தங்கள் திறனை சாதனையாக்கி பெருமை தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, நேசனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செய்யதா அப்துல்லா, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர்கள் செல்வராஜ், கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story