பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 333 மனுக்கள் பெறப்பட்டன


பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 333 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 31 July 2023 6:45 PM GMT (Updated: 31 July 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 333 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை ப்பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாற்றுதல், கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 312 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று 21 பேரிடம் மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த மனுக்களை தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். கூட்டத்தில் ஈமச்சடங்கு செய்வதற்காக இறந்து போன 2 மாற்றுத்தினாளிகளின் வாரிசுகளுக்கு தலா ரூ.17 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். மேலும் கடந்த 27-ந் தேதி ஜி.அரியூர் கிராமத்தில் ஆய்வு செய்துவிட்டு திரும்பிய கலெக்டரின் காரை நிறுத்தி இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் கேட்ட 2 கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ராமதாசுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரை வழங்கினார். இதற்காக மாற்றுத் திறனாளி ராமதாஸ் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர் ராஜலட்சுமி, உதவி ஆணையர்(கலால்) ராஜவேல், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story