சேலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 335 மனுக்கள் பெறப்பட்டன


சேலத்தில்  மக்கள் குறைதீர்க்கும் முகாமில்  335 மனுக்கள் பெறப்பட்டன
x

சேலத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 335 மனுக்கள் பெறப்பட்டன.

சேலம்

சேலம்,

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து கலெக்டரிடம் தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். மொத்தம் 335 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

சேலம் அழகாபுரம் ராமன்குட்டை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களில் சிலர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் ராமன் குட்டை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்களிடம் ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவை உள்ளன.

மாற்று இடம்

இந்த நிலையில் நாங்கள் குடியிருக்கும் இடம், ஏரி புறம்போக்கு நிலம் என்று கூறி வருவாய்துறையினர் நாங்கள் குடியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். இதைவிட்டால் எங்களுக்கு வேறு இடமோ, வீடோ இல்லை. இதனால் எங்கள் பகுதியில் உள்ள அரசு நிலத்தில் மாற்று இடம் வழங்க வேண்டும். மாற்று இடம் கொடுத்தால் நாங்கள் அந்த வீட்டை காலி செய்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளிடம் மனு வாங்கிய கலெக்டர்

தொடர்ந்து கலெக்டர் கார்மேகம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து இருந்த மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.


Next Story