'நான் முதல்வன்' திட்டத்தில் 345 பேருக்கு பணி வாய்ப்பு


நான் முதல்வன் திட்டத்தில் 345 பேருக்கு பணி வாய்ப்பு
x

நெல்லை பல்கலைக்கழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 345 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

பேட்டை:

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு மையம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் இணைந்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக வளாகத்தில் நெல்லை மாவட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது. முகாமில் 650 மாணவர்கள் கலந்துகொண்டனர். 16 நிறுவனங்கள் முகாமில் பங்கேற்றன. அனைத்து மாணவர்களுக்கும் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. அதில் 345 மாணவர்களுக்கு பணி வாய்ப்புக்கான உறுதி நிறுவனத்தாரால் அளிக்கப்பட்டது. மற்ற மாணவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு நிறுவனத்தாரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பி.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பணி நியமன ஆணையை வழங்கினார். பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ், தேர்வாணையர் அண்ணாதுரை, மற்றும் வேலை வாய்ப்பு மைய அதிகாரிகள் ஆகிேயார் பணி நியமன ஆணை பெற்ற மாணவிகளை பாராட்டினர்.


Next Story