தொழிலாளியிடம் 35 பவுன் தங்கநகை மோசடி


தொழிலாளியிடம் 35 பவுன் தங்கநகை மோசடி
x
தினத்தந்தி 4 Aug 2023 1:45 AM IST (Updated: 4 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியிடம் 35 பவுன் தங்கநகை மோசடி செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்


கோவை


கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரதீஷ்குமார் (வயது 54). இவர் செல்வபுரம் சிவாலயா சந்திப்பில் தங்கி கட்டிட உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு செல்வபுரத்தை சேர்ந்த நிஷாந்த் என்பவர் கடந்த ஆண்டு அறிமுகமானார்.

இவர் ரதீஷ்குமாரை கேரள மாநிலம் திருச்சூர் அருகே அம்பாலுரை சேர்ந்த ஜோபி (வயது 44) என்ற நகை தொழிலாளியிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

ரதீஷ்குமார் தன்னிடம் இருந்த 35 பவுன் பழைய நகைகளை ஜோபியிடம் கொடுத்து புதிய நகைகளாக செய்து கொடுக்குமாறு கூறினார்.


இந்த நகைகளை வாங்கிக் கொண்ட ஜோபி, அதன்பிறகு மாயமா னார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இது குறித்த புகாரின்பேரில் ஜோபி மீது செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்.



Next Story