குமரியில் ஊர்க்காவல் படைக்கு 35 பேர் தேர்வு


குமரியில் ஊர்க்காவல் படைக்கு 35 பேர் தேர்வு
x

குமரியில் ஊர்க்காவல் படைக்கு 35 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் ஊர்க்காவல் படைக்கு 35 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு படை போலீசாருக்கு உதவும் வகையில் ஊர்க்காவல் படையில் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு நடந்தது. 2 நாட்கள் நடந்த தேர்வில் 78 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு போலீசார் உடல் தகுதி தேர்வு மற்றும் கல்வி சான்றிதழ்களை சரி பார்த்தனர். 2 நாட்களில் ஊர்க்காவல் படைக்கு மொத்தம் 35 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story