350 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


350 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 11:59 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி கடைகளில் 350 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியான செக்காலை ரோடு, கல்லுக்கட்டி, அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் தலைமையில் நகர் நல அலுவலர் டாக்டர் திவ்யா, துப்புரவு அலுவலர் சுருளிராஜன், சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், ஆதிநாராயணன், பிருந்தா உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட விற்பனைக்காக வைத்திருந்த 350 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கடை உரிமையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story